Wednesday, 12 August 2015

போட்டித்தேர்வு மூலம் அரசு பள்ளிகளில் 1,400 சிறப்பாசிரியர்கள் நியமனம்: அறிவிப்பு விரைவில்

அரசு பள்ளிகளில் ஏறத்தாழ 1,400 சிறப்பாசிரியர்கள் (தையல், ஓவியம், உடற்கல்வி) போட்டித்தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.


பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு உயர்நிலை, மேல் நிலைப் பள்ளிகளிலும், மாநக ராட்சிப் பள்ளிகளிலும் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய சிறப்பாசிரியர்கள் முன்பு பதிவு மூப்பு (சீனியாரிட்டி) அடிப்படை யில் நியமிக்கப்பட்டு வந்தனர். தொடக்கத்தில் மாவட்ட அளவி லான பதிவுமூப்பும், அதன்பிறகு மாநில அளவிலான பதிவுமூப்பும் பின்பற்றப்பட்டன.
 
tnpsc coaching center in vellore
tnpsc coaching center in vellore



கடந்த 2012-13-ம் கல்வி ஆண்டுக்கான சிறப்பாசிரியர் பணியிடங்களில் 782 காலியிடங் களை மாநில அளவிலான பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்பும் பொருட்டு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 8.5.2013 அன்று ஓர் அறிவிப்பை வெளியிட்டது. இதற்கான தற்காலிக தெரிவு பட்டியலும் தயாரான நிலையில், வெறும் பதிவுமூப்பு அடிப்படையில் மட்டுமே ஆசிரியர்களை நியமிக் கக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை கடந்த 9.6.2014 அன்று உத்தரவிட்டது. 


உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை தொடர்ந்து, சிறப் பாசிரியர்களை போட்டித்தேர்வு மூலம் நியமிக்கும் வகையில் தமிழக அரசு கடந்த 17.11.2014 அன்று ஓர் அரசாணையை வெளி யிட்டது. அதன்படி, மொத்தமுள்ள 100 மதிப்பெண்ணில் 95 மதிப் பெண்ணுக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்படும். எஞ்சிய 5 மதிப் பெண், கூடுதல் கல்வித்தகுதி, பணிஅனுபவம், என்சிசி, என்எஸ்எஸ் செயல்பாடு போன்ற வற்றுக்கு ஒதுக்கப்படும். 


இந்த நிலையில், 440 உடற்கல்வி ஆசிரியர்களையும், 196 ஓவிய ஆசிரியர்களையும், 137 தையல் ஆசிரியர்களையும், 9 இசை ஆசிரியர்களையும் (மொத்தம் 782 காலியிடங்கள்) மாநில அளவிலான பதிவுமூப்பு அடிப்படையில் தேர்வுசெய்யும் வகையில் கடந்த 8.5.2013 அன்று வெளியிட்ட அறிவிப்பினை ஆசிரியர் தேர்வு திரும்பப்பெற்றுள்ளது. சிறப்பாசிரியர்களை போட்டித்தேர்வு மூலம் நியமனம் செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 


ரத்துசெய்யப்பட்ட அந்த அறிவிப்பின் மூலம் நியமிக்கப்பட இருந்த 782 காலியிடங்களும் 2012-13-ம் கல்வி ஆண்டுக்கான காலியிடங்கள் ஆகும். தற்போது, 2013-14, 2014-15, 2015-16 ஆகிய 3 கல்வி ஆண்டுகளுக்கும் சேர்த்து கணிசமான காலியிடங்கள் வந் துள்ளன. 


இந்த 3 கல்வி ஆண்டு களுக்கான புதிய காலியிடங்கள் மற்றும் முந்தைய பழைய 782 காலியிடங்களைச் சேர்ந்து ஏறத்தாழ 1,400 சிறப்பாசிரியர் பணியிடங்களை ஒரே போட்டித்தேர்வு மூலமாக நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய உயர் அதிகாரி தெரிவித்தார்.

Tuesday, 11 August 2015

TNPSC Group I (குரூப்–1) தேர்வில் 74 பணியிடங்களுக்கு 222000 பேர் விண்ணப்பம்

குரூப்–1 தேர்வில் 74 பணியிடங்களுக்கு 222000 பேர் விண்ணப்பம் : அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் தகவல்.

TNPSC Group I தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி முடிவடைந்தது:

குரூப்–1 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி முடிவடைந்தது. 74 பணியிடங்களுக்கு 2 லட்சத்து 22 ஆயிரத்து 771 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–2 லட்சத்து 22 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

tnpsc coaching center in vellore
tnpsc coaching center in vellore


TNPSC Group 1  - 74 Post :

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட பதவிகளுக்கு 74 காலிப்பணியிடங்களை நிரப்பும் பொறுப்பை தமிழக அரசு கொடுத்தது. அதன்படி முறையாக அறிவிக்கப்பட்டு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்து இருந்தோம். விண்ணப்பிக்கும் தேதி முடிவடைந்தது. மொத்தம் 2 லட்சத்து 22 ஆயிரத்து 771 பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலானவர்கள் என்ஜினீயரிங் படித்தவர்கள்.இவர்கள் அனைவரும் முதலில் முதல் நிலை தேர்வு எழுதவேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் மெயின்தேர்வை எழுதுவார்கள். அதிலும் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். மெயின்தேர்விலும், நேர்முகத்தேர்விலும் அதிக மதிப்பெண் எடுப்பவர்கள் அதிகாரிகளாக தேர்ந்து எடுக்கப்படுவார்கள். எவ்வளவு விரைவாக முடிவை அறிவிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக அறிவிக்க உள்ளோம்.

முடிவு வெளியீடு:

நேர்முகத்தேர்வுடன் கூடிய குரூப்–2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் கடந்த ஜூலை 17–ந் தேதி முதல் 27–ந் தேதி வரை நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டது. அவர்கள் மெயின் தேர்வில் எடுத்த மதிப்பெண் மற்றும் நேர்முகத்தேர்வில் எடுத்த மதிப்பெண் விவரம் ஆகியவை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கலந்தாய்வு:

அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு கலந்தாய்வு வருகிற 24–ந் தேதி முதல் செப்டம்பர் 1–ந் தேதி வரை நடக்க உள்ளது. 1,136 பணியிடங்களுக்கு 2ஆயிரத்து 265 பேர் அழைக்கப்பட உள்ளனர். இவ்வாறு சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.